2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பணப்புழக்கம் சீராக இருக்கும். கடந்த காலச் செலவுகள் இன்றி, கையில் பணமும் பொருட்களும் தங்கும். எனினும், இந்த வாரம் எதிர்பாராத பொழுதுபோக்குச் செலவுகளும், பயணச் செலவுகளும் ஏற்படும். புதிய முயற்சிகள் இந்த வாரம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், வழக்கமான பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. குரு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் இருப்பதாலும், செவ்வாய் ஏழாம் தேதி சிம்ம ராசிக்கு மாறுவதாலும், பெரிய காரியங்களில் வெற்றி சற்று கடினம். உறவுகளால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். குறிப்பாக, ஏழாம் தேதிக்குப் பிறகு இளைய சகோதர, சகோதரிகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். பிரிந்து போன உறவுகள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகளும், நெருங்கிய உறவுகளால் நன்மையும் ஏற்படும். வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை, சனி பகவானின் பார்வை ஒரு வேலையை உறுதி செய்தாலும், புதனின் நிலை காரணமாக பெரிய அளவில் அங்கீகாரமோ, பதவி உயர்வோ, சம்பள உயர்வோ கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தேர்வுகளில் வெற்றி பெறுவதும் இந்த வாரம் சாத்தியமில்லை. ஆறுதல் தரும் விஷயங்கள் குறைவாகவே இருக்கும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். இந்த வாரம் சனி பகவானை வழிபடுவதும், ஆஞ்சநேயரை தரிசனம் செய்வதும் உங்களுக்கு மிகவும் முக்கியம்.

Updated On 3 Jun 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story