2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் வேலைவாய்ப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, போனஸ், நிலுவைத் தொகை அனைத்தும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வங்கிக் கடன் எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். செல்லப்பிராணிகள் வளர்க்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்றது. விருப்பமான மற்றும் எதிர்பாராத செய்திகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் இல்லை என்பதால் முதலீடுகளில் கவனம் தேவை. உங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களால் உங்கள் வாழ்வில் ஏற்றம் உண்டாகும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். இந்த வாரம் பொழுதுபோக்கு நிகழ்வுகள் அதிகம் இருக்கும். எதிர்பாராத பயணங்கள், அதற்கான செலவுகள் ஏற்படலாம். இந்த வாரம் முழுவதும், முருகப் பெருமானையும், மகாலட்சுமியையும் வழிபடுவது நல்லது.

Updated On 10 Jun 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story