2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் வெற்றிபெற வாய்ப்புள்ளது. ஆனால் அதற்காக நீங்கள் நிறைய போராட வேண்டியிருக்கும். ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் மகிழ்ச்சி, சந்தோசம் நிச்சயம் உண்டு. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டுவர வாய்ப்புகள் உள்ளன. கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கும், நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இந்த வாரம் நிவாரணம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் பெறுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்காமல் போகலாம். ஆனால் முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத நண்பர்களின் மூலம் நல்ல ஏற்றம் உண்டாகும். மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மை கிடைக்கும். பிரிந்த உறவுகள் சேர வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இந்த வாரம் விநாயகரையும், முருகப்பெருமானையும் வழிபடுவது நன்மை பயக்கும்.

Updated On 17 Jun 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story