2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களின் நிதி நிலைமை பரவாயில்லை என்றாலும், 12ஆம் இடத்தில் சனி இருப்பதால், எவ்வளவு சம்பாதித்தாலும் செலவுகள் அதிகமாகவே இருக்கும் அல்லது முதலீடுகள் செய்ய நேரிடலாம். முயற்சிகளில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையும் நிதானமும் தேவை. வேலை வாய்ப்புகள் இருந்தாலும், வேலையில் திருப்தியற்ற மனநிலை இருக்கும். எனவே, வேலையில் கவனம் செலுத்தி, அனைவரிடமும் பொறுமையுடன் பழகுங்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, செல்வாக்கு கூடும். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறுதொழில், சுயதொழில் மற்றும் ஆன்லைன் வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெரிய அளவில் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபத்தை அளிக்கும் வாரமாக இது அமையும். மேலும், உயர் கல்வி மற்றும் மறுமண முயற்சிகளுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். மகாலட்சுமி மற்றும் பைரவரை வழிபடவும்.

Updated On 1 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story