2025 ஜூலை 22-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 5-ம் இடத்தில் இருப்பதால், மகிழ்ச்சி, பொழுதுபோக்கு, சுற்றுலா போன்றவற்றுக்காகச் செலவு செய்ய நேரிடும். வருமானம் இருந்தாலும், சுபச்செலவுகளும் ஏற்படும். மொத்தத்தில், இந்த வாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். குரு பகவான் உங்கள் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால், இறை அருளும் துணையாக நிற்கும். உற்பத்தி மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமானதாக அமையும். புதிய வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்; வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எனினும், வேலையில் முழுமையான திருப்தி இருக்காது. தொழிலைப் பொறுத்தவரை, சற்று மந்தமான நிலையே காணப்படும். லாபம் குறைவாக இருக்கும் என்பதால், புதிய முதலீடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் கடின உழைப்பு மற்றவர்களுக்கு பலன் அளிக்கும் வாரமாக இது அமையும். திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். சனீஸ்வரர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவது நன்மையைச் சேர்க்கும்.

Updated On 22 July 2025 12:04 AM IST
ராணி

ராணி

Next Story