2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைமைகள் நன்றாக இருக்கும். குறிப்பாக நிலம், வீடு போன்ற நிரந்தர சொத்துக்களை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் அமையும். ஆடி மாதம் பொதுவாக வீடு கட்ட ஏற்றதல்ல என்ற நம்பிக்கை இருந்தாலும், சாஸ்திரப்படி ஆடி மாதமே வீடு கட்ட உகந்தது. இந்த வாரம் ஆடி 18, 19 வரை வருவதால், சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்களது வேலைவாய்ப்புகள் சாதாரணமாக இருக்கும்; அதிக முயற்சி தேவைப்படும். வேலை மாற்றம், உள் மாற்றம் அல்லது பதவி மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த வாரம் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நீண்டகாலமாக எதிர்பார்த்த கடன் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. உங்களது ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில் இருப்பதால், எதிரிகளை வெல்வதற்கான சூழல் இருந்தாலும், நிறைய போராட்டங்கள் இருக்கும். உற்பத்தி சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு ஓரளவு நன்றாக இருக்கும். வியாபாரம் சாதாரணமாகவே இருக்கும் என்றாலும், வருமானம் இருக்கும். நல்ல நட்பு வட்டம் அமையும். வெளிநாட்டு மொழி பேசுபவர்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். முருகப்பெருமானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.
