2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வருமானம் வந்தாலும், அதே அளவுக்கு செலவுகளும் காத்திருக்கின்றன. ராசிநாதன் செவ்வாய் ஆறாம் இடத்தில் சூரியனுடன் இருப்பதால், கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது மன உளைச்சலையும், அலைச்சலையும், தேவையற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதால், அவசரம் இல்லாத வரை புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. குருவும் சுக்கிரனும் முயற்சி ஸ்தானத்தில் இருந்தாலும், அந்த வீட்டுக்குரியவர் நல்ல நிலையில் இல்லை. ஆடி மாதத்தின் இந்தக் கடைசி காலகட்டத்தில், நீண்ட நாட்களாக விற்காமல் இருக்கும் சொத்துக்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியாக, உங்கள் சேவை ஸ்தானத்தில் செவ்வாய் சனியுடன் இருப்பதால், வேலை இருந்தாலும் அதில் திருப்தி இருக்காது. வேலைப் பளுவும், போராட்டங்களும், மன வருத்தங்களும், வெளிப்படையாக சொல்ல முடியாத பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே, எந்த வேலையாக இருந்தாலும் ரசித்துச் செய்வது நல்லது. சொந்தத் தொழில் அல்லது சிறு தொழில்கள் வழக்கம் போல் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. சனி பகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நன்மையை தரும்.
