2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் நல்ல பொழுதுபோக்கு உண்டு. எதிர்பாராத சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பணப்புழக்கம் சீராக இருக்கும். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எனினும், உங்கள் ராசிக்கு 12-ல் சனி வக்ர கதியில் இருப்பதால், எந்த முதலீடும் செய்வதற்கு முன் கவனமாக இருங்கள். நண்பர்களால் வாழ்வில் முன்னேற்றமும், நீண்ட தூரப் பயணங்களிலிருந்து நல்ல செய்திகளும் வரும். குறிப்பாக, வெளிநாட்டு மொழிகள் பேசும் நண்பர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். வேலைவாய்ப்பை பொறுத்தவரை, இந்த வாரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. உங்கள் வேலையில் ஒருவித திருப்தியின்மை தொடர்ந்து இருக்கும். எனவே பொறுமையாகவும், கவனமாகவும் செயல்படுவது அவசியம். பிரிந்துபோன உறவுகள் மீண்டும் இணைய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். இந்த வாரத்தில் ஆஞ்சநேயர் மற்றும் பைரவரை வழிபடுவது உங்களுக்கு நன்மையை தரும்.
