2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்களுக்கு வருமானம் சிறப்பாக இருந்தாலும், எதிர்பாராத செலவுகள் அதிகமிருக்கும். உங்கள் ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் மற்றும் கேது இருப்பதால், பொழுதுபோக்கு, சுற்றுலா போன்றவற்றுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். மேலும், 12-ம் இடத்தில் இருக்கும் சனி, எதிர்பாராத செலவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார். தொழில் ரீதியாகப் பார்த்தால், முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் லாபம் பிறருக்கே அதிகம் செல்லும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாய்ப்புகள் அமையும். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சனி பகவானின் பார்வை இருப்பதால், உங்கள் உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் நிச்சயம் உண்டு. பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் ஆகியவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் அனைவருக்கும் இந்த வாரம் ஏதேனும் ஒரு வகையில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கடன்கள், வழக்குகள் ஆகியவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இந்த வாரம் நீங்கள் சிவன் மற்றும் பெருமாளை வழிபடுவது நல்லது.
