2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள், ஆசைப்பட்ட விஷயங்கள் பூர்த்தியாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெரும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் அவருடைய நட்சத்திரத்தில் இருப்பதனால் நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செயல்படுத்துங்கள். உங்களுக்கு இந்த வாரம் நல்லதொரு வருமானம், சம்பாத்தியங்கள் இருக்கிறது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யுங்கள். உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விலை கிடைக்கும். உங்கள் காதல் தொடர்பான விஷயங்கள் வெற்றியடையும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றத்தை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலை, வருமானம் இருந்தாலும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். அதனால் வேலையில் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. உங்களது நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும் அதே வேளையில் தோழிகளால் அதிக செலவினங்களும் ஏற்படும். சொந்த தொழில் பரவாயில்லை. திருமண வாழ்க்கையும் சுமாராக உள்ளது. சிவன் மற்றும் துர்க்கை வழிபாடு ஏற்றம், முன்னேற்றத்தை தரும்.
