2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தேவையில்லாத செலவினங்கள், விரயங்கள், நஷ்டங்கள் இந்த வாரம் இருந்துகொண்டே இருக்கும். பொருளாதார நிலைகளை பார்க்கும் போது வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கிறது. வேலையை பொறுத்தவரையில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. சொந்த தொழிலில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். என்ன காரணத்திற்காக கடன் வாங்குகிறீர்களோ அவை எல்லாமே நடக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றியடையும். உங்களுடைய வெளிநாட்டு தொடர்புகள் வெற்றியை கொடுக்கும். புதிய விஷயங்களில் ஈடுபடுவீர்கள். நீங்கள் நம்பியவர்கள் ஏதோ ஒரு வகையில் உதவி செய்வார்கள். நீங்கள் தொடர்பு கொள்ள நினைப்பவர்களிடம் நேரடியாக பேசுங்கள். உங்களுக்கு சாதகமான பதில்கள் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களாக இருந்தால் பார்ட்னர் லாபம் அடைவார். இரண்டாவதாக திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், நடைபெறுவதற்கான சூழல்கள் உள்ளன. பெரியளவில் தொழில் தொடங்க நினைப்பவர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். இந்த வாரம் துர்க்கை, காளி மற்றும் சிவ வழிபாடு ஏற்றம் தரும்.
