2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் கையில் பணம், தனம் இருந்து கொண்டே இருக்கும். யாருடைய பணமாவது உங்களுடைய கையில் ரொட்டேஷனில் இருந்துகொண்டே இருக்கும். வாய்ப்பிருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. எந்த வேலையில் இருந்தாலும் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த வாரம் உங்களின் சர்வீஸ் ஸ்தானத்தை குருபகவான் பார்த்துக்கொண்டே இருப்பதால் வேலையை பற்றிய கவலை வேண்டாம். கடன் கேட்டிருக்கிறீர்கள் அல்லது லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். காதல் விஷயங்கள் வெற்றிபெற்று திருமணத்தில் முடியும். சொந்த தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத்தொழில் நன்றாக உள்ளது. நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இந்த வாரம் முழுவதுமே விநாயகரையும், பிரதானமாக முருகரையும் வழிபாடு செய்யுங்கள். நல்லதொரு முன்னேற்றம் அமையும்.
