2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி ஆகியவை கூடும். அரசு வேலைக்கு தேர்வு எழுதி இருந்தால் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க முடிவு செய்திருந்தால் அதற்கான சூழல்கள் சாதகமாக உள்ளது. லாபஸ்தானம் சிறப்பாக உள்ளதால் முதலீடுகள் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். வங்கி கடனுக்கு விண்ணப்பித்து இருந்தால் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம், புரொமோஷன், சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். எதிரிகளை ஜெயிப்பீர்கள். கடன் தொந்தரவு குறையும். தொழில் சிறப்பாக உள்ளது. திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சிக்கலாம். பாஸ்போர்ட், வீசாவிற்கு விண்ணப்பித்து இருந்தால் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உங்கள் இஷ்ட தெய்வம் மற்றும் சிவ தலத்தில் இருக்கக்கூடிய அம்பாள் வழிபாடு நன்மை தரும்.
