2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வசதிகள் இருந்தால் பொருட்கள் வாங்குங்கள் அல்லது ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். பொருளாதாரத்தை பொறுத்தவரையில் வருமானங்கள் நிறைய இருக்கிறது. அதற்கு தகுந்த செலவினங்களும் இருக்கின்றன. ஆனாலும் வாழ்க்கையில் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய பணம், தனம் கையில் இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஓரளவுக்கு வெற்றியாகும். உங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெரும். நினைப்பது நடக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். நீண்ட நாட்களாக திருமணம் தள்ளி போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். புதிய காதல் மலரும். அந்த காதல் வெற்றியடையும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வேலையில் புதிய அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். மூத்த சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குறிப்பாக பெண் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டு. இந்த வாரம் துர்க்கை மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கும் தாயாரை வழிபடுவதும் இன்னும் மகிழ்ச்சியை தரும்.
