✕
2023, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தெய்வீக இடங்களில் புதிதாக அறிமுகமாகும் நபர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 1 மற்றும் 8-ஆம் வீட்டு அதிபதிகள் ஒன்றாக இருப்பதால் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வரலாம். தலைவலி, மன அழுத்தம், பதற்றம் போன்றவை ஏற்படக்கூடும். துணைவரின் தாய் அல்லது உறவினர் வீட்டுக்கு சென்றுவருவீர்கள். வீடு, வாகனம் மாற்ற விரும்புவோர் மாற்றலாம். இந்த வாரத்தில் மேற்கொள்ளும் பணிகளுக்கு பின்னாளில் நல்ல பலன்கள் கிட்டும்.

ராணி
Next Story