✕
2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணங்கள் கைக்கு வரும். கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் மற்றும் தனவரவு உண்டு. எதிர்பாராத வழியில் பணங்கள் கிடைக்கும். சுய தொழில் மற்றும் பார்ட்னர்ஷிப் தொழில்கள் செழிக்கும். வெற்றிகள் கிடைக்கும். வேலை நன்றாக இருக்கும். புது காதல் மலர வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே காதலில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தேவையின்றி கடன் கொடுக்கவேண்டாம். திரும்பி கிடைக்க வாய்ப்புகள் இல்லை. சகோதர சகோதரிகளின் உறவில் கவனம் தேவை. அரசுத்துறைகளில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. ஆசைகள் பூர்த்தியாகும். தெய்வ அனுகூலம் உண்டு.

ராணி
Next Story