2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலம் வலுவாக உள்ளது. வராமல் நிலுவையில் இருந்த பணங்கள் தற்போது வராமல் இருப்பதே நல்லது. முயற்சிகள் ஓரளவு வெற்றியடையும். நினைப்பது நடக்கும். ஒவ்வொரு அடியும் பார்த்து எடுத்துவைக்க வேண்டும். வேலையில் மாற்றம் இருக்கும். சுய தொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் லாபமடைவார். கணவன் - மனைவியிடையே கருத்து வேற்பாடு, சண்டைகள் உண்டு. நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகளுக்கு செலவு செய்ய நேரிடும். உறவுகளால் ஒரு பக்கம் நன்மையும், மற்றொரு பக்கம் பிரச்சினையும் உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறுக்கு வாய்ப்பு உள்ளது. குல தெய்வ வழிபாடு, முருக வழிபாடு செய்ய சிறப்பான பலன்கள் அமையும்.
