✕
2023 டிசம்பர் 26 முதல் 2024 ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வருட ஆரம்பமே வெற்றிதான். வேலை சிறப்பாக இருக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். கஷ்டப்பட்டு உழைக்கும் சம்பாத்தியங்கள் கையில் இருந்தாலும் செலவீனங்களும் இருக்கும். தினசரி வேலைகளை மட்டும் செய்யுங்கள். உற்பத்திக்கு ஏற்ற விற்பனை உண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். சுய தொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் லாபமடைவார். நீண்ட தூர பிரயாணத்திற்கு திட்டமிடுவீர்கள். எதிர்பாராத ஆலய தரிசனம் அமையும். மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. நண்பர்களால் மகிழ்ச்சி உண்டு. தேவையில்லாமல் கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். பெருமாள் ஸ்தல மகா லட்சுமி வழிபாடு மற்றும் சிவ வழிபாட்டால் ஏற்றம் ஏற்படும்.

ராணி
Next Story