2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்களது புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். சமூக சேவை கூடும். அரசாங்கத்தால் ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் நிறைய இருக்கிறது. புதிய முயற்சிகளில் ஈடுபட்டால், அவை பெரிய அளவில் வெற்றி பெற வாய்ப்புகள் இல்லை. குறிப்பாக 7-ஆம் தேதிக்கு பிறகு எந்த முயற்சிகளும் வேண்டாம். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மைகள் மற்றும் செலவினங்கள் ஏற்படும். உங்கள் காதல் வெற்றியடையும். பிரிந்து போன காதல் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. நீங்கள் நினைத்த காரியங்கள் நடைபெற வேண்டும் என்றால் தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். விநாயகர் மற்றும் நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தை தரும்.
