2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நமது விருப்பம், ஆசை, அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ராகு 12-ஆம் இடத்தில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்தில் வெற்றி பெற்றாலும் திருப்தி இல்லாத மனநிலை ஏற்படும். பொருளாதார நிலையை பார்க்கும்போது வருமானம், சம்பாத்தியங்கள் இருக்கிறது. புதிய முயற்சிகள் ஏதும் எடுக்க வேண்டாம். நெருங்கிய உறவினர்கள் விஷயங்களில் கவனமாக இருங்கள். சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன் தொழில் செய்பவர்களுக்கு பெரிதாக லாபம் இல்லை. பெரிய முதலீடுகள் ஏதும் செய்ய வேண்டாம். உங்கள் காதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெற்றியாகவே இருக்கும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் உங்கள் காதலில் இருந்து கொண்டே இருக்கும். வேலை இருக்கிறது. வருமானம் இருக்கிறது. ஆனால் கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் மட்டுமே நீங்கள் நினைத்தது நடக்கும். தொழில் மற்றும் திருமண வாழ்க்கையை பொறுத்தவரையில் பரவாயில்லை. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நண்பர்களால் நன்மை. அதேநேரம் அவர்களை விட்டு பிரிந்து இருக்க வாய்ப்புள்ளது. சிவபெருமான், துர்க்கை, காளி ஆகியோரை வழிபடுவதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.

Updated On 19 March 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story