2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் கையில் பணம், பொருள் இருக்கும். வருமானங்கள் இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு யோசித்து செயல்படுங்கள். நீண்ட நாட்களாக விற்காமல் இருக்கும் சொத்துக்கள் விற்பனையாகும். இளைய சகோதர - சகோதரிகள், உறவினர்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்திற்காக செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை தரும். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. பணி சுமை, அழுத்தம் இருக்கும். வேலையில் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த தொழிலாக இருந்தாலும் சரி, கூட்டுத் தொழிலாக இருந்தாலும் பெரிதாக லாபம் இல்லை. கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு தேவையில்லாத செலவினங்கள், விரய செலவுகள், வைத்திய செலவுகள் போன்றவை இருந்து கொண்டே இருக்கும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கல்வி சிறப்பாக உள்ளது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த வாரம் சிவன், துர்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
