2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

மூத்த சகோதர - சகோதரிகள், நண்பர்களால் நன்மை ஏற்படும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தாலோ அல்லது யாரிடமாவது கடன் கேட்டிருந்தாலோ கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். காரணம் நாம் செய்யக்கூடிய முயற்சிகளில் நிறைய தடைகள், போராட்டங்கள் இருக்கும். உறவினர்கள், அண்டை, அயலார் போன்றவர்களாலும் பிரச்சினைகள், மனவருத்தங்கள் ஏற்படும். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி இருக்கும். வருமானங்கள் சுமார். காதல் விஷயங்கள் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையை பொறுத்தவரை மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. மற்றபடி பெரிதாக முன்னேற்றங்கள் ஏதும் இல்லை. சொந்த தொழில் மற்றும் கணவன் - மனைவி உறவு ஆகியவை சுமார். வாரம் முழுவதும் முருகனை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள். சிவனை தரிசனம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

Updated On 29 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story