2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கடந்த காலங்களில் பூர்த்தியாகாத உங்களின் எண்ணங்கள் இந்த வாரத்தில் இருந்து நடக்கும். விருப்பங்கள், எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் அத்தனையும் பூர்த்தியாகும். அதற்கான கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. இந்த வாரத்தில் இருந்து துணிந்து செயல்படுங்கள். நிச்சயம் வெற்றிகள் கிடைக்கும். யாரை நம்பி இருக்கிறீர்களோ, ஏதோவொரு வகையில் அவர்கள் உங்கள் வெற்றிக்கு பாடுபடுவார்கள். நீங்களும் உங்களை பெரிய அளவில் புதுப்பித்து கொள்வீர்கள். நிறைய முயற்சி செய்யுங்கள், கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். உங்கள் முயற்சி வரும் காலங்களில் மிகப்பெரிய வெற்றியையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். உங்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையில் உங்களின் முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் மற்றும் நீங்கள் இருவரும் லாபம் அடைவீர்கள். உங்களுடைய மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் துர்க்கையை தரிசனம் செய்து வாருங்கள் நற்பலன்கள் கிடைக்கும்.

Updated On 14 May 2024 11:53 AM IST
ராணி

ராணி

Next Story