2024 மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு ரூபத்தில் உங்களுக்கு சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். இதுவரை பெரிய அளவில் பிரச்சினைகள், போராட்டங்கள் இருந்தாலும் கூட, இந்த வாரத்தில் உங்களை அறியாத தைரியம், தன்னம்பிக்கை வரும். பொருளாதார நிலைகளை பொறுத்த வரையில் உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. விற்காத சொத்துக்கள் நன்கு விற்பனையாகும். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் உள்ளன. சகோதர - சகோதரிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய காலம். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். புதிய காதல் மலருவதற்கான வாய்ப்புகள் உங்கள் ஜாதகத்தில் இருந்துகொண்டே இருக்கிறது. பிரிந்த காதல் சேருவதற்கான சூழ்நிலைகளும் உள்ளன. வேலை நன்றாக உள்ளது. வேலையில், உங்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். கடன் அல்லது லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். சொந்த தொழில் பரவாயில்லை. ஒன்றிற்கும் மேற்பட்ட திருமணம் அல்லது இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். வாய்ப்பிருந்தால் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டில் முதலீடு செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
