2024 ஜூன் 04-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத தைரியம், தன்னம்பிக்கை வந்துவிடும். நீங்கள் எடுக்கக்கூடிய காரியங்கள் ஏதோவொரு ரூபத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடியவை உங்கள் கையில் பணமாகவோ, தனமாகவோ இருக்கும். கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு, தனவரவு இருக்கிறது. எதிர்பாராத தனவரவுகளும் இருக்கின்றன. பென்ஷன், பிஎப், கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் போன்ற பணங்கள் வராமல் இருந்தால் அவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பேச்சின் மூலமாக வருமானங்கள் கூடும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. வேலையை பொறுத்தவரை ஏதோவொரு வருமானம் இருந்து கொண்டே இருக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். சொந்தமாக இடம் வாங்க வாய்ப்புகள் உள்ளன. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். இந்த வாரத்தில் உங்களின் வருமானங்கள், சம்பாத்தியங்கள் அனைத்துமே நன்றாக உள்ளன. இந்த வாரம் முருகனையும், விநாயகரையும் வழிபாடு செய்யுங்கள். வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.
