2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இதுவரை நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் மளமளவென்று நடக்கும். குழப்பங்கள் அனைத்தும் நீங்கி தெளிவான சிந்தனை, தெளிவான செயல்பாடுகள் ஏற்படும். கடந்த வாரத்தை போன்றே இந்த வாரமும் பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளன. பணம், தனம், பொருள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். வீடு, இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். நன்கு படிப்பீர்கள். உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்வீர்கள்.அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். அந்த காதல் வெற்றியடையும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள் கிடைக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டு. சொந்தமாக செய்யக்கூடிய தொழில், கூட்டுத்தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதுமே துர்க்கை மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
