2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அத்தனையும் ஏதோவொரு விதத்தில் வெற்றியடையும். நினைத்தது நடக்கும். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், நெருங்கிய உறவுகளால் நற்பலன்கள் ஆகியவை இருக்கின்றன. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். எந்த வேலையில் இருந்தாலும் ஒரு திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். அதனால் கிடைத்த வேலையை திருப்தியோடு செய்யுங்கள். அதே நேரம் உங்கள் வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் அத்தனையும் இருக்கின்றன. மேலும், பணி உயர்வு, சம்பள உயர்வு, பணப்பயன் ஆகியவை உண்டு. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகள் இருந்தால் அதில் வெற்றி பெறுவீர்கள். சொந்த தொழில் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக உள்ளது. புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதுமே விநாயகர் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள் இன்னும் சிறப்பான வாரமாக அமையும்.
