2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் முயற்சிகள் ஏதோவொரு வகையில் வெற்றியடையும். நீங்கள் நினைப்பதை தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் செயல்படுத்துங்கள். செவ்வாய் உங்கள் ராசியில் இருப்பதால் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகள் உங்களுக்கு அமையும். இருந்தாலும் எல்லோருடைய விஷயத்திலும் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். யாருக்காவது கடன் கொடுத்தால் அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை பரவாயில்லை. மணி ரொட்டேஷன் இருந்து கொண்டே இருக்கும். வேலையை பொறுத்தவரை எந்த வேலை பார்த்தாலும் அதில் திருப்தியான மனநிலை இருக்காது. அதனால் செய்யும் வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். அரசு, தனியார் என எந்த வேலையில் இருந்தாலும் உங்கள் வேலையில் பொறுமை, நிதானம் தேவை. உங்கள் காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். காதல் வெற்றி அடைய நிறைய வாய்ப்புகள் உண்டு. சொந்த தொழில் செய்தால் அந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை ஒருபக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும். வெளிநாட்டு தொடர்புகள் நன்றாக உள்ளன. இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்தால் ஏற்றம், முன்னேற்றம் அமையும்.

Updated On 2 July 2024 9:04 AM GMT
ராணி

ராணி

Next Story