2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எல்லாவற்றிலும் பொறுமை, நிதானம் அவசியம். குறிப்பாக யாரிடமும் தேவையில்லாமல் பேச வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டாம். அறுவை சிகிச்சை ஏதும் செய்ய வேண்டி இருந்தால் செய்யுங்கள். இந்த வாரம் வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருந்தாலும், அந்த பணம் முடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களின் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறாது. அதனால் புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். இளைய சகோதர - சகோதரிகள், அண்டை வீட்டார், நெருங்கிய உறவினர்கள் என்று அத்தனை உறவுகளிடமும் கவனமாக இருங்கள். தேவையில்லாத கவலைகள் மற்றும் டென்ஷனை கைவிடுங்கள். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. பிரிந்த காதல் சேரும். சொந்த தொழில் சுமாராக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். கணவன் - மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 21 May 2024 9:08 AM GMT
ராணி

ராணி

Next Story