2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுக்கு எல்லாம் சிறப்பாக உள்ளதால், வேலையில் முன்னேற்றம் உண்டாகும். வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகள் வெற்றியடையும். எதிரிகளை ஜெயிப்பதற்கான சூழ்நிலைகள் இருக்கு. உங்கள் பணியில் தனித்துவமாக தெரிவதற்கான வாய்ப்புகள் இல்லை. சொந்த தொழிலில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டு. அப்பாவின் அன்பு ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். எது எப்படி இருந்தாலும் உங்களுடைய கவுரவம், புகழ், அந்தஸ்து காப்பாற்றப்படும். பொருளாதாரத்தில் பணம், தனம் எப்போதும் சிறப்பாக இருக்கும். இடம், வீடு வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். அதற்கான சூழல் சிறப்பாக உள்ளது. சனி பகவான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு நற்பலன்களை தரும்.

Updated On 16 Jan 2024 4:32 AM GMT
ராணி

ராணி

Next Story