2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலத்தை கூட்ட வேண்டும். பொருளாதார பிரச்சினைகள் ஏதும் இல்லை. வெளியில் இருந்து வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். ஒன்றிற்கு மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் புதிய உறவு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், அவர்களால் பிரச்சினைகள் இரண்டும் இருக்கும். இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனம் அவசியம். அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம். நிதானமாக செயல்படுங்கள். தேவையில்லாத சிந்தனைகளை தவிர்த்துவிடுங்கள். யாரையும் நம்ப வேண்டாம். உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்கள் மட்டுமின்றி மெக்கானிக்கல், கெமிக்கல் இண்டஸ்ட்ரி, ஆட்டோமொபைல், டிரான்ஸ்போர்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு சுமாராக இருக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் மற்றும் ஆன்லைன் பிசினஸ் போன்ற தொழில்களில் முதலீடுகள் செய்தால் சுமாரான அளவில் இருக்கும். அரசியல் வாழ்க்கையில் நிறைய தடைகள் இருக்கும். நரசிம்மர் மற்றும் சிவபெருமான் வழிபாடு நற்பலன்களைத் தரும்.
