2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கடந்த வாரத்தில் இருந்த கடுமையான நிகழ்வுகள், இந்த வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விலகியிருக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். அப்பாவால் ஏதேனும் காரியம் ஆக வேண்டும் அல்லது அவரிடம் அன்பு, ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. ஒரு நீண்ட தூர பயணத்திற்கான சூழ்நிலைகள் உருவாகும். தொழில் செய்து வருபவர்கள் அந்த தொழிலை மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இரண்டாவது திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும். புதிய அலுவலகம் மாற நினைப்பவர்கள் அதற்காக முயற்சி செய்யலாம். பொருளாதார ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லை. எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஷேர் மார்க்கெட், ரேஸ், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். அரசியலில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய மாற்றம், முன்னேற்றம் உண்டு. இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.
