2024 மே 21-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் கோச்சாரத்தில் உங்கள் லாப ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் உங்களின் எண்ணங்கள், ஆசைகள், அபிலாஷைகள் அத்தனையும் பூர்த்தியாகும். இதுவரை உங்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி, நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். உங்களின் எண்ணங்கள் செயலாக்கம் பெரும். உறவுகளாலும் நற்பலன்கள், மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும். முயற்சிகள் வெற்றியடையும். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போக வாய்ப்புள்ளது. இந்த வாரம் புதிதாக காதல், அந்த காதலால் ஒருபக்கம் மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யுங்கள். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. பணிச்சுமை, அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் ஆகியவை குறையும். இந்த வாரம் பைரவரை வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக தன்வந்திரி பகவானை தரிசனம் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
