2024 செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வருமானம் நன்றாக உள்ளது. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த செய்திகள், எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை இருக்கிறது. வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம், வருமானம் இருக்கிறது. உங்கள் சர்வீஸை பொறுத்தவரை வேலைகள் நன்றாக இருந்தால் கூட கவனமாக இருங்கள். வேலையில் டென்ஷன், வருத்தம், மனஅழுத்தம் ஆகியவை இருக்கும். நீங்கள் பார்க்கும் வேலையைவிட்டு வெளியே வர வேண்டிய காலங்கள், விட வேண்டிய காலங்கள் இருக்கிறது. வேலையில் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். மணவாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ரேஸ், லாட்டரி, பிட்காயின், கிரிப்டோ கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு லாபம், வருமானம் இல்லை. அதனால் எந்தவிதமான முதலீடாக இருந்தாலும் பார்த்து செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் பைரவரையும், முருகனையும் வழிபாடு செய்யுங்கள்.