2024 நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்த தொழில் நன்றாக உள்ளது. வேலையை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய முன்னேற்றம் நிச்சயம் உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும். தேர்வுகள் எழுதி இந்த வாரம் ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலையாட்கள் வருவார்கள் அல்லது கிடைப்பார்கள். நல்ல வாடகை வீடு அமையும். கிடைக்காமல் இருந்த சொத்துக்கள் கிடைக்கும். பென்ஷன், பிஎஃப், அரியர்ஸ் ஆகிய பணங்கள் ஏதோவொரு விதத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பண வரவு, பொருள் வரவு்ககு வாய்ப்புள்ளது. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட் இருக்கிறது. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மையும் இருக்கிறது. இளைய சகோதர - சகோதரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏதாவது ஒரு சுபநிகழ்ச்சிகளில் நீங்களும் கலந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது. நட்பு வட்டாரம் டெவலப் ஆகும். குறிப்பாக பெண் நண்பர்களால் நற்பலன்கள் ஏற்படும். வாரம் முழுவதும் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய சனி பகவானை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 25 Nov 2024 3:58 PM GMT
ராணி

ராணி

Next Story