2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலம் கிடைக்கும். அதனால் நீண்ட தூர யாத்திரை செல்ல நினைப்பவர்கள் முயற்சி செய்யலாம். தொழில் நன்றாக உள்ளது. வேலையில் மாற்றம் அல்லது பதவி உயர்வு ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இரண்டாவது திருமணம் முயற்சிப்பவர்களுக்கு சந்தர்ப்பங்கள் கூடி வரும். கலைத்துறையினருக்கு புகழ் கிட்டும். பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வணிகம் லாபத்தை தரும். தள்ளிப்போன சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் மேம்படும். உங்களை மேம்படுத்தவும், புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளவும் வாய்ப்புகள் உருவாகும். இந்த வாரம் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். பெண் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரிகள் மூலம் நன்மைகள் உண்டாகும். கல்வி சிறப்பானதாக இருக்கும். அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். பொதுவாக வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், ராசியில் செவ்வாய் இருப்பதால் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் மேற்கொள்ளலாம். அரசியல் மற்றும் அரசாங்க விஷயங்களில் அமைதியாக இருக்கவும். இந்த வாரம் முழுவதும், முருகப்பெருமானையும், மகாலட்சுமியையும் வழிபடுவது நலம் தரும்.
