2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நல்லது, கெட்டது என இரண்டும் கலந்த வாரமாக இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு வெளிநாட்டுப் பயணம் அல்லது அது தொடர்பான விஷயத்தில் ஒரு சிறு தடை ஏற்படலாம். இருப்பினும், கவலை வேண்டாம், உங்கள் முயற்சிகள் தொடரும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் இந்த வாரம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவு இருந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். உங்கள் பேச்சின் காரணமாக பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் அதில் கவனமாக இருங்கள். இரண்டாவது திருமணத்திற்கு முயற்சிக்கலாம். தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் உங்கள் பார்ட்னர் லாபம் அடைவார். வேலை அல்லது தொழில் சம்பந்தமாக பார்க்கும்போது, நீங்கள் வருமானம் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும். கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால், கண்டிப்பாக பணம் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் ஏதோ ஒரு விதத்தில் வெற்றி பெறலாம். உறவுகளால் நன்மையும், மகிழ்ச்சியும் உண்டாகும். எண்ணங்கள், சிந்தனைகள், செயலாக்கம் பெறும். நீங்கள் யாரை நம்புகிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருப்பார்கள். இந்த வாரத்தில் விநாயகரையும், காளியையும் வழிபாடு செய்யுங்கள்.
