2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். இரண்டாம் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஆண் நண்பர்களால் நல்ல ஏற்றமும் முன்னேற்றமும் காண்பீர்கள். பொருளாதார ரீதியாக பணம் புரளும், புதிய வருமான வாய்ப்புகளும் அமையும். இந்த வாரம் நீங்கள் எந்த புதிய காரியத்தையும் தொடங்கலாம்; உங்கள் திட்டங்களை வகுத்து வெற்றிகரமாக செயல்படுத்த இதுவே சரியான நேரம். யாரையெல்லாம் நேரடியாகத் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களோ, அவர்களை இடைத்தரகர் இன்றி அணுகுங்கள்; இது உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும். சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன் வணிகம், மியூச்சுவல் ஃபண்ட், டிரேடிங், டிரான்ஸ்போர்ட், டிஜிட்டல், மீடியா அல்லது மார்க்கெட்டிங் துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்றமான வாரமாக அமையும். யாருக்கும் பணம் கடன் கொடுக்கவோ, எந்த விஷயத்திலும் தலையிடவோ வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்; இது பிற்காலத்தில் பிரச்சனைகளை உண்டாக்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த வாரம் திருமண வாய்ப்புகள் அதிகம். வேலையில் இடமாற்றம் அல்லது வேறு நிறுவனத்திற்கு மாற விரும்புபவர்களுக்கும் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாரம் காளியை வழிபடவும், விநாயகரைத் தொடர்ந்து வணங்கவும்.
