2025 ஜூன் 10-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் பொருளாதாரம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். கையில் பணம், பொருள் இருக்கும். பேச்சில் கவனம் தேவை, தேவையற்ற பேச்சுக்களைத் தவிருங்கள். இல்லையேல் பிரச்சனைகள் வரலாம். வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கும், பதவி உயர்வு, சம்பள உயர்வு, போனஸ், நிலுவைத் தொகை ஆகியவை கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம். யாருக்கும் ஜாமீன் அல்லது செக்யூரிட்டி கொடுப்பதைத் தவிர்க்கவும். சொந்த வியாபாரத்தில் லாபம் வருவதுபோல் தோன்றினாலும், தடைபடலாம். மணவாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புகழ், அந்தஸ்து கூடும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம், விருதுகள், ஸ்பான்சர்ஷிப் ஆகியவை கிடைக்கும். முயற்சிகள் பெரிய அளவில் கை கூட வாய்ப்பில்லை. இந்த வாரம் முழுவதும், மகாவிஷ்ணுவையும், சிவ ஆலயத்தில் நந்தியையும் வழிபடுவது நல்லது.

Updated On 10 Jun 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story