2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் முதலீடு செய்ய வாய்ப்பு இருந்தால் செய்யுங்கள். இல்லையெனில் தேவையற்ற செலவுகள், நஷ்டம், மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற பேச்சுகளால் பிரச்சனைகள் வரலாம். யாருக்கும் கடன் கொடுப்பதையோ, ஜாமீன் கையெழுத்து போடுவதையோ தவிர்க்கவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியூர், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. புதிய இடங்களில் வாழும் சூழ்நிலை உருவாகும். வீடு, இடம் மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. புதிய முயற்சிகளைத் தவிர்த்து, அன்றாட வழக்கத்தைப் பின்பற்றுங்கள், ஏனெனில் இந்த வாரம் கிரக நிலைகள் சாதகமாக இல்லை. வேலையில் நிறைய போராட்டங்கள் இருக்கும், பொறுமையாக கையாளவும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் கவனமாக பழகவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடனைத் தவிர்ப்பது நல்லது. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். இரண்டாவது திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் வருமானம் நன்றாக இருக்கும். இந்த வாரம் துர்க்கையை வழிபடுவதும், சித்தர்களை தரிசிப்பதும் நன்மை பயக்கும்.

Updated On 17 Jun 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story