2025 ஜூன் 24-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் குருவும், சூரியனும் இருப்பதால், இந்த வாரம் தேவையற்ற முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நஷ்டம் ஏற்படலாம். கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் கிரக நிலைகள் சுமாராகவே இருப்பதால் எல்லா விஷயத்திலும் பொறுமையும், நிதானமும் தேவை. எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கும். யாரிடம் பேசும்போதும் கவனமாக இருங்கள். ஏனெனில் பேச்சால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கடந்த வாரம் போலவே இந்த வாரமும் உங்கள் பேச்சே எதிரிகளை உருவாக்கலாம். பணம் கடன் கொடுத்தால் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. யாருக்கும் பிணையம் போடுவதையும், பாதுகாப்பு கொடுப்பதையும் தவிர்க்கவும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. 2-ம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் தாராளமாக செய்யலாம். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் வருமானம் நன்றாக இருக்கும். நிலுவைத் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை மாற்றுவது அல்லது வெளிநாடு செல்வது பற்றி யோசிப்பவர்கள் பொறுமை காக்க வேண்டும். வேலையில் போராட்டங்கள் இருக்கும். கலைத்துறையில் புகழும், அந்தஸ்தும் இருக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம், நிதி உதவி, விருதுகள் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் சிவன் மற்றும் பிரம்மாவை வழிபடுங்கள்.
