2025 ஜூலை 08-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் செலவினங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். உழைத்து சம்பாதித்த பணம் கையில் இருந்தாலும், செலவுகள் கூடும். எனவே திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். கையில் பணம் இருந்தால் முதலீடு செய்வது நல்லது. இல்லையெனில் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். கடந்த வாரத்தைப் போலவே, இந்த வாரமும் கிரக நிலைகள் சுமாராகவே இருக்கும், எனவே எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டவர்கள் இந்த வாரம் செய்யலாம். இது நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை, வேலை இருந்தாலும் பல போராட்டங்களை சந்திக்க நேரிடும். யாரையும் நம்பி எந்தக் காரியத்தையும் இந்த வாரம் செய்ய முடியாது. நன்மை செய்பவர்கள் கூட இந்த வாரம் விலகி இருக்க நேரிடும் அல்லது பிரச்சனைகளை உருவாக்கலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் போன்றவற்றை இந்த வாரம் எதிர்பார்க்க வேண்டாம். வேலை கிடைத்ததே பெரிய விஷயம் என்று நினைத்து செயல்படுங்கள். அவசரகால கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். திருமண வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் செய்யலாம். வியாபாரத்தைப் பொறுத்தவரை, லாபம் கிடைப்பது போல ஒரு தோற்றம் இருந்தாலும், உழைப்பால் மன உளைச்சல் ஏற்படும். துர்க்கை மற்றும் சிவ தரிசனம் இந்த வாரம் முழுவதும் முக்கியம், இது உங்களுக்கு மன அமைதியை அளிக்கும்.
