2025 ஜூலை 22-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசியில் சூரியனும், புதனும் இருப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆனால், இரண்டாம் இடத்தில் செவ்வாய் கேது இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. வீண் பேச்சு பிரச்சனைகளை உருவாக்கலாம். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டு. நீங்கள் விரும்பியது நடக்க வாய்ப்புள்ளது. தேடல்கள் அதிகரிக்கும், ஆனால் சனி முயற்சி ஸ்தானத்தைப் பார்ப்பதால் சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்பாக இருங்கள். வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துச் செயல்படுங்கள். உற்பத்தித் துறையினருக்கு நல்ல லாபமும் விற்பனையும் உண்டு. கல்வி நன்றாக இருக்கும். வேலை வாய்ப்புகள் உண்டு, ஆனால் பதவி உயர்வில் போராட்டங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. சிறிய பிரச்சனைக்கும் மருத்துவரை அணுகவும். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். எட்டாம் இடத்தில் ராகுவும் குருவும் இருப்பதால் அரசாங்கம் மற்றும் உறவுகளால் பிரச்சனைகள் வரலாம். தந்தையை விட்டுப் பிரிய வேண்டி வரலாம். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். மறுமணம் செய்பவர்களுக்கு வாய்ப்பு உண்டு. பிரம்மாவையும், துர்க்கையையும் வழிபடுங்கள்.
