2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் சூரியனும் புதனும் உங்கள் ராசியில் இருப்பதால், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழப்பங்களுக்கு தெளிவான தீர்வு கிடைக்கும். உங்கள் ராசியின் மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால், நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் திட்டங்கள் இந்த வாரம் உங்கள் முயற்சிக்கு ஏற்றவாறு வெற்றி பெறும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் அதிகமாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வருமானம், புகழ் மற்றும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல வாரம். குறிப்பாக யூக வணிகங்கள் அனைத்தும் பெரியளவில் கைகொடுக்கும். விளையாட்டில் இருப்பவர்களுக்கு விருதுகள் கிடைக்கும். அரசியல் வாழ்க்கையில் ஏற்றம் உண்டாகும். இந்த வாரம் துர்கையையும் காளியையும் வழிபடுங்கள்.
