2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களுக்கு மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சோம்பேறித்தனத்தைத் தவிர்த்துவிட்டு சுறுசுறுப்பாகவும், ஆக்டிவாகவும் இருங்கள். எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற முடியும். பேச்சினால் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் உண்டு. குழந்தைகளுக்காக செலவு செய்ய நேரிடும். அவர்களுடன் பிரிந்து இருக்க நேரிடும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் சாதாரணமாக இருக்கும். புதிய நிலம் அல்லது வீடு வாங்க நினைத்தால், இந்த வாரம் அதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கவும் வாய்ப்பு உண்டு. விவசாயத் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை, உங்களுக்கு வேலை இருக்கும். ஆனால் அதில் திருப்தி இருக்காது. கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, அது கிடைக்கும். ஆனால், அந்தக் கடன் உங்களுக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது. ஆகையால், கடன் வாங்கும் முன் நன்றாக யோசிக்கவும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்திடுங்கள். பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூரில் அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்ய விரும்பினால், செய்யலாம். உயர் கல்வி அல்லது ஆராய்ச்சி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் நீங்கள் சிவனையும், முருகப்பெருமானையும் வழிபடுவது நல்லது.

Updated On 30 Sept 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story