2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்தமாக தொழில் தொடங்க ஏற்ற காலம். ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கும் சிறப்பான காலமாகவே உள்ளது. திருமணத் தடைகள் நீங்கும். குழந்தைகளால் நற்பலன்கள், மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். தொலைதூர பயணம் வேண்டாம். பொருளாதார பிரச்சினைகள் எதுவும் இல்லை. எடுக்கும் முயற்சிகளை தாமதமாக செயல்படுத்துவது நல்லது. எல்லா உறவுகளையும் அனுசரித்து போவது நல்லது. வேறு வேலை அல்லது முக்கியமான காரியங்களை எதிர்பார்த்து காத்திருந்தால் அவற்றில் பொறுமை அவசியம். அவசரம் இல்லாமல் முடிவுகளை எடுப்பது நல்லது. அம்மாவுடைய அன்பும் ஆதரவும் கிடைக்கும். முதலீடுகளால் லாபம் இருக்காது. எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. பெருமாள் தலங்களில் உள்ள நரசிம்மர் மற்றும் சிவன் வழிபாடு நற்பலன்களை தரும்.

Updated On 6 Feb 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story