2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலம் கிடைக்கும். கௌரவம், புகழ், அந்தஸ்து கூடும். இன்னொரு பக்கம் உங்களை அறியாத கவலை, பீதி, மனக்குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். காரணம் 8-ஆம் இடத்தில் சனி, அவரோடு செவ்வாய், சுக்கிரன் இருப்பதால்தான். கடந்த வாரத்தை விடவே இந்த வாரம் பரவாயில்லாமல் இருக்கிறது. எல்லா பிரச்சினைகளில் இருந்தும் மீண்டு வருவீர்கள். எதிர்பாராத ஆலய தரிசனம் ஏற்படும். வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும் போதெல்லாம் யாராவது ஒருவர் வந்து உதவுவார்கள். வேலை பரவாயில்லை என்றாலும் அதில் ஏதாவது ஒரு பிரச்சினை, வருத்தம், டென்ஷன், இருந்துகொண்டே இருக்கும். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவிக்கிடையே பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். எது எப்படி இருந்தாலும் 10-ஆம் இடத்தில் குருவும், புதனும் இருந்து 4-ஆம் இடத்தினை பார்ப்பதால் கல்வி நன்றாக இருக்கும். அம்மாவின், அன்பு ஆதரவு கிடைப்பதுடன், அவரால் நற்பலன்கள் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்ஷனுக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள், உங்கள் எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த வாரம் முழுவதும் நரசிம்மர் மற்றும் சிவ வழிபாடு பிரதானமாக செய்வது நல்லது.
