2023, ஆகஸ்ட் 22 முதல் 28 - வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
வேலையில் முன்னேற்றம் காண, பிடித்த சாமி படத்தை வேலை செய்யும் இடத்தில் வைத்து, மனம் சஞ்சலப்படும் நேரங்களில் பிரார்த்தனை செய்யுங்கள். வேலை செய்யும் இடத்திலிருக்கும் தேவையில்லாத பொருட்களை தூக்கிப்போடுங்கள். சிறுசிறு மாற்றங்களை செய்வதன்மூலம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வீர்கள். மனைவியுடன் உறவு நன்றாக இருக்கும். கோயில்களுக்கு செல்வீர்கள். வீட்டிலிருப்போரின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் கழித்து நண்பர்களுடன் பேசும் வாய்ப்புகள் உருவாகும். பிஸினஸ் செய்வோருக்கு கடினமான சூழல் உருவாகலாம். வேலை செய்யும் இடங்களில் பேசுவதை தவறாக புரிந்துகொள்வதால் பிரச்சினைகள் வரலாம். இதனை தவிர்க்க, முருகன், சந்திரன் மற்றும் குருவுக்கு விளக்கேற்றுங்கள். 26, 27 ஆகிய தேதிகளில் சற்று மோசமாக இருக்கும்.
