✕
2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் பேச்சுத்திறன் நன்கு வெளிப்படும். உங்கள் பேச்சு மற்றவருக்கு ஊக்கமளிக்கும். வேலையில் ஒத்துழைப்பு குறையும். குழுவாக பணியாற்றும்போது தவறான புரிதல் ஏற்படும். தொழிலில் கூட்டாளியுடனும் வீட்டில் கணவன் அல்லது மனைவியுடனும் புரிதலில் குழப்பம் மற்றும் சண்டைகள் இருக்கும். அது உங்கள் பணியை பாதிக்கும். வேலையை மேம்படுத்துவதற்காக பயணம் செய்ய வேண்டியிருக்கும். கோவில் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க விரும்புவீர்கள். குழுவில் ஒருங்கிணைந்து பணியாற்ற இயலாது.

ராணி
Next Story