✕
2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
நெடு நாட்களாக பணம், கடன் மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் விடிவுகாலமாக அமையும். கடன் தொல்லையிலிருந்து சற்று விலகி, சந்தோஷம் கிடைக்கும். வாரத்தின் பிற்பகுதியில் சவால்கள் வந்தாலும் முயற்சிகள் வெற்றிபெறும். பிரயாணம் மற்றும் புதிய நபர்களால் வியாபாரம் மற்றும் பொருளாதாரத்தில் ஆதாரங்கள் கிட்டும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் வரும் என்பதால் வெளியே சாப்பிடுவதை தவிர்க்கவும். தாமதமாக செல்வதால் வாய்ப்புகளை இழக்க நேரிடும். மூத்த சகோதர, சகோதரிகள் மூலமாக அனுகூலம் கிட்டும். கார், டூவீலர் வாங்க வாய்ப்புகள் உண்டு. பிரச்சினைகள் விலகும்.

ராணி
Next Story